மறந்து போன நீராகர சாதம் – நீத்தண்ணிச்சோறு

முப்பது வருடங்களுக்கு முன் அனைவருமே சாதத்தை வடித்து சாப்பிட்டு பின் மறுநாள் காலை நீராகாரம் அருந்துவது என்பது வழக்கமாக நடைபெறும் செயல். இப்போது நிறைய விஷயங்களை மீட்டெடுத்து வருகிறோம். அந்த வகையில் நீராகாரத் தண்ணீரை ஒரு நாள் புளிக்க வைத்து அதில் நொய்யை போட்டு சமைத்து அதற்கு கறிவேப்பிலை துவையலுடன் சாப்பிடும் போது அமிர்தமாக இருக்கும்.

NeeragaraSadham_2

தேவையான பொருட்கள்

  • நொய் அரிசி – 1 கப்
  • புளித்த நீராகாரம் – 2.5 கப்
  • கறிவேப்பிலை – 15 இலைகள்
  • நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. நொய் அரிசியை தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் புளித்த நீராகாரத்தை ஊற்றி கொதிக்க விடவும்.
  3. நீராகாரம் நன்கு கொதித்ததும் நொய் அரிசியை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
  4. பின் தேவையான அளவு உப்பு மற்றும் கிள்ளிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.
  5. அரிசி பாதி வெந்ததும் இல்லாமல் முழுவதும் சிறிது நல்லெண்ணெய் விட்டு கிளறி 2 இறக்கவும்விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். சூடாக கறிவேப்பிலை துவையலுடன் நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து பரிமாறவும்.

குறிப்பு

இந்த சாதத்தில் கறிவேப்பிலையோடு இரண்டு நார்த்தங்காய் இலைகளும் சேர்க்கலாம். நொய் அரிசிக்கு பதில் புழுங்கல்அரிசி அல்லது சிறுதானிய அரிசி (சாமை, வரகு, குதிரைவாலி) வைத்தும் பொங்கலாம்.

நீத்தண்ணிச்சோறு  படிப்படியாக பட விளக்கத்தோடு காண கீழே இருக்கும் லிங்க் மேலே கிளிக் செய்யவும்.

நீத்தண்ணிச்சோறு

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑